தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்ச! - ராஜபக்ச பயணத் திட்டம்

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Sri Lankan PM to visit India
Sri Lankan PM to visit India

By

Published : Jan 12, 2020, 10:14 PM IST

கடந்தாண்டு புதிய அரசு அமைந்த பின் இலங்கை பிரதமர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச பிப்ரவரி மாதம் இந்தியா வரவுள்ளார். ஆனால், அவர் வரும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இலங்கை செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிதாக அமைந்த அரசுடன் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ள இந்தியா பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு இந்தியா பொருளாதார உதவிகளை மேற்கொண்டுவருகிறது.

கடந்தாண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட 50 மில்லியன் டாலர் உட்பட சுமார் 450 மில்லியன் டாலரை இலங்கைக்கு அளிப்பதாக இந்தியா அறிவித்தது.

இதேபோல, கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைக்க சட்டப்பிரிவு 13-ஐ நிறைவேற்ற இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இலங்கை பிரதமர் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வளைகுடா நாடுகளில் இந்தியா சந்திக்கப் போகும் சவால்கள்

ABOUT THE AUTHOR

...view details