'தி நியூ டைமண்ட்' என்ற கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டது.
இலங்கை கிழக்கு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் கடந்த 3ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவர, இலங்கைக் கடற்படையினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டன. இந்திய அரசு சார்பிலும் தீயை அணைக்க இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன.