தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை எந்நாட்டுக்கும் அடிபணியாது - அதிபர் கோத்தபய - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்க பேச்சு

கொழும்பு: இலங்கை எந்த நாட்டுக்கும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SRI LANKA [PRESIDENT GOTABAYA RAJAPAKSA
SRI LANKA [PRESIDENT GOTABAYA RAJAPAKSA

By

Published : Jan 4, 2020, 2:23 PM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டு நாடாளுமன்றத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

அப்போது அவர், "ஊழல், குற்றங்களை ஒழித்தால் நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெருகி, பொருளாதாரம் மீண்டெழும். பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் இறையாண்மையைக் காக்க முடியும்.

தேர்தல் நடத்தும் முறை, அரசியல்சாசன ஆகியவற்றில் சீர்த்திருத்தம் கொண்டுவந்தால் இலங்கை வளர்ச்சி காணும். பயங்கரவாத அரசியலை ஒழிக்க வேண்டுமெனில் அதிபரின் அதிகாரத்தை அதிகரித்தல் அவசியம்.

அந்நிய நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும். அதேசமயம், எக்காரணம் கொண்டும் அந்நிய நாடுகளுக்கு நாம் (இலங்கை) அடிபணியக் கூடாது.

ஆகையால் அற்பத்தனமான அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுசேருமாறு அனைத்துப் பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இலங்கை அதிபராக கோத்தபய தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிங்க : இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் சுலைமானி - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details