சீனாவின் நிதியுதவியோடு இலங்கை தலைநகர் கொழும்புவில், சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் துறைமுக நகரம் ஒன்று உருவாக்கும் பணியில் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, "சீனாவின் உதவியோடு செயல்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை, இலங்கை அரசு உறுதியுடன் ஊக்கவிக்கும். இதன்மூலம் அங்குப் புதிய வர்த்தக மையம் உருவாகும்" என்றார்.