தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"வரும் நவம்.,16இல் அதிபர் தேர்தல்" - இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Election Commission

கொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

By

Published : Sep 18, 2019, 9:34 PM IST

இது குறித்து அந்நாட்டு தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்ரியா கூறுகையில், அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெறும். இதுதொடர்பான ஆணை இன்று இரவு அரசிதழில் வெளியாகும் என தெரிவித்தார்.

முன்னதாக இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி தங்களது அதிபர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details