இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே உள்ள வெடிகுண்டுகளை ராணுவத்தினர் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெலிபென்னா நகரிலுள்ள மசூதி ஒன்றின் பின்புறத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
இலங்கை: மசூதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!
கொழும்பு: இலங்கையில் மசூதிக்கு பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
3 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
மேலும், மவுண்ட் லவினியா பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 16 மென்பொருள் சார்ந்த சாதனங்கள், 16 சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றையும் ராணுவத்தினர் அதிரடியாக பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தேவாலயங்களில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஞாயிறு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது.