இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு - இலங்கை
2019-04-25 09:57:47
கொழும்பு: இலங்கையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு வெடித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஆங்காங்கே தொடர்ந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. நேற்றும் கொழும்பு வெள்ளவெத்தைப் பகுதியில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தில் சிறிய ரக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்துவரும் சூழலில் மேலும் ஒரு குண்டு வெடித்திருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.