இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 253 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொலை - sri lanka
2019-04-28 14:09:43
இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொலை
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி ஆகிய அமைப்புகள் மீது அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டி தடை விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்பு தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் என கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.