கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. தற்போது உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை இந்த வைரஸ் மீண்டும் தாக்குமா என்பது குறித்து இதுவரை எந்தவொரு உறுதியான ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தென் கொரியால் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிய நூற்றுக்கணக்கானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தென் கொரியாவின் மருத்துவக் குழுவின் தலைவர் மியோங்-டான் கூறுகையில், "இந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளில் சிறு குறைபாடு இருக்கலாம். ஏனென்றால் தென்கொரியாவில் பயன்படுத்தப்படும் பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் மிகக் குறைந்த அளவு வைரஸ் தொற்றைக் கண்டறிந்தாலும் அதைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.