உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 64 லட்சத்து 12 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, இந்த வைரஸ் தொற்றுக்கு 6 லட்சத்து 52 ஆயிரத்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே 42 ஆயிரத்து 362 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தென்கொரியாவில், புதியதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் 14 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் திங்களன்று(ஜூலை.27), வெளிநாட்டிலிருந்து தென்கொரியாவிற்கு வந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக கூறியுள்ளது.