தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கிழக்கு கடலில் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதை கண்டிக்கும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை குறைந்த தூரம் சென்று தாக்கும் இரண்டு புதிய ரக ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை ? - south korea
சியோல்: கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இதனையடுத்து, கிழக்கு கடலை நோக்கி மீண்டும் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா தற்போது சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியாவில் உள்ள சவுட் வங்ஹெ பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்து சென்று கிழக்கு கடலை சென்றடைந்ததாக, தென் கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றையும் அந்நாடு வெளியிட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.