இமயமலையில் உள்ள மக்காலு சிகரத்தில் பனிமனிதனின் கால்தடம் இருப்பதாக இந்திய ராணுவம் சமீபத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டது. இது இணையத்தில் வைரலானது. பலரும் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கால்தடம் பனிமனிதனின் கால்தடம் இல்லை என்று நேபாளம் நாட்டின் ராணுவம் விளக்கம் கொடுத்துள்ளது.
‘பனி மனிதனின் கால்தடம் இல்லை’ - நேபாள ராணுவம் மறுப்பு! - footprint is not-Nepalese
காத்மண்டு: மக்காலு சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பனிமனிதனின் கால்தடம் இல்லையென்றும், அது கரடியின் கால்தடம் எனவும் நேபாள நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பனிமனிதனின் கால்தடம்
இதுகுறித்து, அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளதாவது, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இமயமலையில் உள்ள மக்காலு சிகரத்தில் பனி மனிதனின் கால்தடம் இருப்பதாக இந்திய ராணுவம் போட்டோ ஒன்றை வெளியிட்டது. ஆனால், இந்த கால்தடம் பனிமனிதனின் கால்தடம் இல்லை என்றும், உள்ளூர் மக்கள் இதை கரடியின் கால்தடம் எனவும் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.