இலங்கையில் நேற்று முன் தினம் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு உலகத்தையே உலுக்கியுள்ளது. மேலும் இலங்கை மக்கள் யாரும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு - இலங்கை குண்டுவெடிப்பு
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது.
srilanka
இதற்கிடையே குண்டு வெடிப்பில் சிக்கி 290 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஆறு இந்தியர்கள் உட்பட 27 வெளிநாட்டினரும் அடங்குவர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.