தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வடகொரியாவுடன் நாங்கள் அமைதியை தான் எதிர்பார்க்கிறோம்' - தென்கொரிய அதிபர்! - தென் கொரியா அதிபர் மூன் ஜே

வடகொரியாவுடன் தென்கொரியா அமைதியைத் தான் எதிர்பார்க்கிறது என தென்கொரிய அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார்.

SKorea wants peaceful coexistence with North: Moon
SKorea wants peaceful coexistence with North: Moon

By

Published : Jun 27, 2020, 2:07 AM IST

வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே 1950 முதல் 1953ஆம் ஆண்டு வரை போர்‌ நடைபெற்றதில், தென்கொரியா வெற்றிபெற்று, அதன் 70ஆவது ஆண்டு விழா நேற்று(ஜூன் 26) சியோலில் நடைபெற்றது.

இந்தப் போரில் பங்கேற்ற 22 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தென் கொரியாவிற்கு காணொலி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தென்கொரிய அதிபர் ஜே மூன், 'வடகொரிய மக்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித பிரச்னையுமின்றி அமைதியாக வாழ்வதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்தார்.

அண்மையில் தென்கொரியா உடனான உறவை முறித்துக் கொள்வதாக, வட கொரியா அறிவித்ததையடுத்து எல்லையில் வடகொரியா ராணுவங்களைக் குவித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details