இது குறித்து மூத்த அரசு ஆலோசகர்களுடன் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், "பன்முன்ஜோம் அமைதி ஒப்பந்தத்தை இரு கொரியா நாடுகளும் கடைப்பிடிக்க முடியாமல்போனதற்கு வடகொரியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகளே காரணம்.
ஆனால், இந்த நிலைமை சீராகும்வரை நாம் காத்திருக்க முடியாது. மாறாக, தடைகள் இருக்கும்போதே யதார்த்தமான, நடைமுறைக்கு உகந்த வழியில் சிறு, சிறு முன்னெடுப்புகளோடு பிரச்னையைத் தீர்க்க முயற்சிசெய்ய வேண்டும்.