ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய தூதர் டிமிட்ரி ஷிர்னோவ், ”காபூலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தாலிபன்களின் முதல் நாள் ஆட்சியை நான் மதிப்பிட்டு பார்க்கிறேன்.
அது சிறப்பாகவே உள்ளது. முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சியைவிட தற்போதைய நிலை சிறப்பாக உள்ளது. கானியைவிட தாலிபன்களின் சிறப்பாக ஆட்சி சிறப்பாக உள்ளது என ஆப்கன் நாட்டு ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூலுக்கு நுழைந்து தாலிபன்கள் அங்கிருந்த அதிபர் மாளிகையை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். காபூலில் வசிக்கும் சர்வதேச தூதர்கள், அலுவலர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதேவேளை தாலிபன்களுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:20 ஆண்டுகளுக்கு பின் தாலிபன்களிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!