தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

15,000 மியான்மர் மக்கள் இந்தியாவிற்குள் குடிபெயர்வு - ஐநா தலைவர் - மியான்மர் ராணுவப் புரட்சி

உள்நாட்டு மோதல் காரணமாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த 15 ஆயிரம் மக்கள் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்துள்ளதாக ஐநா சபைத் தலைவர் கூறியுள்ளார்.

coup in Myanmar
coup in Myanmar

By

Published : Oct 1, 2021, 5:27 PM IST

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த மாற்றத்திற்குப் பின்னர் அந்நாட்டு குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.

இந்தியா அண்டை நாடான மியான்மர் 1,600 கி.மீ. நீளத்திற்கு வேலியில்லா எல்லையை கொண்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அருணாசல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் சர்வதேச எல்லையை பகிர்கிறது.

இந்த மாநிலங்களில் மியான்மர் மக்கள் குடியேற்றம் நிகழ்வதாக தொடர்ந்து புகார் எழுந்துவருகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்ரெஸ் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், 'மியான்மரில் நிலவும் சிக்கலின் தாக்கம் தாய்லாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் எல்லைப் பிரச்னை எதிரொலிக்கிறது. ராணுவ ஆட்சிக்குப்பின் சுமார் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் வாசிகள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில், 15 ஆயிரம் பேர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும், ஏழாயிரம் பேர் தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலானோர் அந்நாட்டின் சிறுபான்மையினரான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்' என ஐநா தலைவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மூன்று வருடங்களுக்குள் மீண்டும் அல்கொய்தா - அமெரிக்க தளபதி எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details