தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பான் சொகுசுக் கப்பல்: மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா! - கொரோனா வைரஸ் டைமண்ட் பிரின்சஸ் இந்தியர்கள்

டோக்கியோ: ஜப்பானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கொகுசுக் கப்பலில் ஏற்கெனவே ஆறு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியபட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

diamond princess, டயமண்ட் பிரின்ஸ்
diamond princess

By

Published : Feb 20, 2020, 2:33 PM IST

சீனா உள்ளிட்ட நாடுகளில் 'கொவிட்-19' (கொரோனா வைரஸ்) பாதிப்பு பரவி வருகிறது. இந்தச் சூழலில் சீனாவிலிருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகம் வந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பலில் முதியவர், ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பல் அங்கேயே சிறைபிடிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பயணிகள், கப்பல் குழுவினர் என மூன்று ஆயிரத்து 711 பேரில் 138 பேர் இந்தியர்கள் ஆவர்.

முன்னதாக, சொகுசுக் கப்பலில் ஆறு இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த ஜப்பான் இந்தியத் தூதரகம், "டைமண்ட் பிரின்ஸ் சொகுசுக் கப்பலில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 88 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில், ஒருவர் கப்பல் குழுவைச் சேர்ந்த இந்தியர் ஆவர்.

கப்பலில் உள்ள பயணிகளை வெளியேற்றும் பணி இன்று தொடங்கியுள்ளது. இது 21 பிப்ரவரி (நாளை) வரை நடைபெறும்" எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க : மத்திய கிழக்கிலும் ஊடுருவிய கொரோனா: இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details