தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாள நிலச்சரிவு : மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கிய வீரர்கள்! - நிலச்சரிவில் சிக்கி 15 பேர்

காத்மண்டு : மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீண்டும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Search resumes in villages hit by Nepal landslide ( add video )
Search resumes in villages hit by Nepal landslide ( add video )

By

Published : Sep 14, 2020, 5:06 PM IST

நேபாளத்தில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக்கிராமங்களில் அதிக பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

முன்னதாக நிலச்சரிவில் சிக்கிய 11 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் 15 பேராவது நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

நேபாளத்தில் வழக்கமாகப் பெய்யும் பருவமழை தற்போது அதிகரித்துள்ளதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான ஒன்று தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details