தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிணை காலத்தை நீட்டிக்க வேண்டி நவாஸ் ஷெரீஃப் தரப்பில் மனு தாக்கல்! - petition

இஸ்லாமாபாத்: தனக்கு வழங்கப்பட்ட பிணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நவாஸ் ஷெரீப்

By

Published : May 1, 2019, 11:38 AM IST

ஊழல் வழக்கில் கைதாகி சிறைத் தண்டணை அனுபவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மருத்துவக் காரணங்களுக்காக கடந்த மார்ச் 26ஆம் தேதி ஆறு வார கால பிணை வழங்கியது.

இந்நிலையில், பிணைக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென நவாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "உடல் மிகவும் மோசமான நிலைமையை எட்டியுள்ளது. பிணைக் காலத்தை நீட்டிக்காவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்" என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை மே 3 தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பிணை வேண்டி, நவாஸ் தரப்பில் கடந்த மாதம் 25 தேதி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details