தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

“மெக்கா பள்ளிவாசல் நுழைவு வாசலில் மோதிய கார்”- சவுதியில் திடீர் பரபரப்பு! - மெக்கா பள்ளிவாசல் நுழைவு வாசலில் மோதிய கார்

மெக்கா பள்ளிவாசல் நுழைவு வாசலில் மோதிய காரால் சவுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Mecca
Mecca

By

Published : Oct 31, 2020, 7:28 PM IST

ரியாத்: இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் இரு பள்ளிவாசல்களுள் முதன்மை பள்ளிவாசலான மெக்கா பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வந்த வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக அந்நாட்டின் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்மந்தப்பட்ட நபர் சுயநினைவின்றி காரை இயக்கினார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கரோனா வைரஸ் ஏற்படுத்திய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மெக்காவின் காபா பள்ளிவாசல் மூடப்பட்டது. இமாம்கள் மட்டும் தினந்தோறும் வழக்கமான பணிகளை செய்துவந்தனர். உள்நாடு, வெளிநாடு என எந்த யாத்ரீகர்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில்தான் வழிபாட்டிற்காக பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

இந்த விபத்து நடைபெற்ற போது மசூதிக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் காபாவில் வழிபட்டு கொண்டிருந்தனர்.

மெக்கா பள்ளிவாசல் நுழைவு வாசலில் மோதிய கார் தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details