தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம் இந்திய அரசு, இந்திய தனியார் கல்வி நிறுவனங்களோடு இணைந்து திறன் மேம்பாட்டு பள்ளிகளை நிறுவிவருகிறது. இதன் ஒரு அங்கமாக, நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக, பரமத்தியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சாம்சங் நிறுவனத்தின் சார்பில், தொழில்நுட்ப பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனை தென்கொரிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, துணைத்தலைவர் தீபக் பரத்வாஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் பேசிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, 'தற்போது உலக அளவில் 4ஆம் தலைமுறை தொழில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. வருகின்ற 2020 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் visual display, வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.