ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு கடந்த 21ஆம் தேதி (ஆக. 21) விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு அவர் விமானத்தில் வந்தபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது.
அவருக்கு முதற்கட்ட சிகிச்சை ரஷ்யாவில் அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாக மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவர எதிர்ப்பாளரான நவல்னிக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என சர்வதேச சமூகம் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ரஷ்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சைபீரியவில் உள்ள அலுவலர்கள் இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அனைத்து தடயங்களும் சேகரித்தப்பின் உரிய விசாரணை நடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்காவின் அடாவடித் தனம் : டிக்டாக்கை விட்டு வெளியேறிய கெவின் மேயர்!