நகோர்னா-காராபாக் பிராந்தியத்தில் அர்மேனியா-அசர்பைஜான் நாடுகள் போரிட்டு வருகின்றன. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இப்பகுதி, இருநாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. தன்னாட்சிப் பிராந்தியமான இங்கு இரு நாடுகளும் போரிட்டு வரும் சூழலில், ரஷ்யா தலையிட்டும் முன்னதாக சமசரப் பேச்சுவார்த்தை நடத்தியது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ இரு நாட்டு பிரதிநிதிகளிடமும் பேசி போர் நிறுத்த ஒப்பந்ததை கடந்த 10ஆம் தேதி மேற்கொண்டார். இருப்பினும் மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்த மோதலில் அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி உள்ள நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாட்டுத் தலைவர்களும் பிராந்திய அமைதியை நிலைநிறுத்துவதற்கு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடி போர் நிறுத்ததிற்கு இருநாட்டுத் தலைவர்களும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அர்மேனியா, அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்துள்ளன. சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டொனால்ட் ட்ரம்ப் மகன் பேரோனுக்கு கரோனா உறுதி