தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 30, 2020, 6:07 PM IST

Updated : Mar 17, 2020, 5:19 PM IST

ETV Bharat / international

கரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷியா

மாஸ்கோ: சீனாவில் கரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது.

Corona Virus Russia Border China,
Corona Virus Russis Border China

சீனாவில் கரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக ரஷிய அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் மிக்கெயில் மிஷுஸ்தின் கூறுகையில், "சீனாவுடனான தொலைகிழக்கு எல்லைகளை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம் மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

சீனர்களுக்கு வழங்கப்படும் இ-விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லெவ்ராவ், 'ரஷ்யா மக்கள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது' என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : கேரள மாணவருக்கு கரோனா வைரஸ்

Last Updated : Mar 17, 2020, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details