மாஸ்கோ:ஆப்கானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், ஆப்கான் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா தனது நேட்டோ படைகளை, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முழுவதுமாக திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டன. இது, தலிபான்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. நாட்டின் 90 விழுக்காட்டுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதிகளை கைப்பற்றி தலிபான்கள் தங்கள் படைகளை நிலை நிறுத்திவருகின்றன.
ரஷ்யா-தஜிகிஸ்தான் உறவு
இந்தச் சூழ்நிலையில், தஜிகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைக்கு ரஷ்யா தனது ராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளது. தஜிகிஸ்தானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நல்லுறவு இருந்துவருகிறது. தலிபான்களால் தகிஸ்தானுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க 6,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் தஜிகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.