இதுகுறித்து அவர் கையெழுத்திட்டுள்ள ஆணையில், "ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டாலோ, நாட்டின் இருப்புக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அந்நிய நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் உரிமை ரஷ்யாவிடம் உள்ளது.
ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கைக்கு அதிபர் புடின் ஒப்புதல்! - ரஷ்யா அணு ஆயுதம் விளாடிமிர் புடன்
மாஸ்கோ: தற்காப்புக்காக அந்நிய நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் ராணுவக் கொள்கைக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
PUTIN
ரஷ்யாவையும் அதன் நட்பு நாடுகளையும் தற்காப்பதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். விண்வெளியிலிருக்கும் சூப்பர்சோனிக் மற்றும் லேசர் ஆயுதங்கள், ஆளில்லா விமானங்கள், விண்வெளியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் ரஷ்யா அச்சுறுதலாகவே பார்க்கிறது. அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு