'எஸ்-400 ட்ரையம்ப்' ஏவுகணை தளவாடத்தைக் கொள்முதல் செய்வதற்கு 2015ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2018இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அதிபர் விளாடிமின் புடின், 'எஸ்-400 ஏவுகணை தளவாடத்தைப் பொறுத்தமட்டில் இந்தியாவிடம் உரிய காலத்திற்குள் ஒப்படைப்போம்' எனத் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டையொட்டி அதிபர் புடினை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்னை குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.