ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 656 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 39 ஆயிரத்து 801 பேர் சிகிச்சைக்கு பின்னர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு இரண்டாயிரத்து ஒன்பது ஆக உள்ளது. கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பின்தொடர்கிறது.