தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2020, 6:53 PM IST

ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கி ரஷ்யா!

மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகளை அந்நாடு தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Russia begins COVID-19 vaccine's production
Russia begins COVID-19 vaccine's production

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதன்முறையில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று தற்போது உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. இந்த பெருந்தொற்றுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கரோனா தடுப்பு மருந்தில் முன்னணியில் உள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.

எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட புதின்

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், ஸ்புட்னிக் V என்ற கரோனா தடுப்பு மருந்தை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார். மேலும், தனது மகளுக்கும் இந்த கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் இந்த கரோனா தடுப்பு மருந்து செய்தி பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், ஸ்புட்னிக் V நம்பகத்தன்மை குறித்து அறிவியல் உலகில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருத்துவ நடைமுறைகளை ரஷ்யா முறையாகப் பின்பற்றவில்லை என்பதைக் கண்டித்து, ரஷ்ய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் அலெக்ஸான்டர் சுச்சாலின் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்புமருந்து உற்பத்தியை தொடங்கி ரஷ்யா!

மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத சூழலில், ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இது எங்க லிஸ்ட்லயே இல்ல' - ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details