தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனா பீதி: ரஷ்யாவுக்குள் நுழைய சீனர்களுக்குத் தடை - Corona Virus Russia ban china citizens entry

மாஸ்கோ: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டவர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

corona virus, கொரோனா வைரஸ்
corona virus

By

Published : Feb 19, 2020, 11:09 AM IST

சீனாவில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்று நோய் அந்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில், சீனாவின் அண்டை நாடான ரஷ்யா கொரோனா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, சீன குடிமக்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. இந்தத் தடை வரும் பிப்ரவரி 20ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து ரஷ்யா சுகாதாரத் துறைக்கான துணைப் பிரதமர் டான்டியானா கோலிகோவா கூறுகையில், " பிப்ரவரி 20ஆம் தேதி முதல் சுற்றுலா, வேலை, படிப்பு என எந்தக் காரணம் கொண்டும் சீன குடிமக்கள் ரஷ்யா வழியாகப் பயணிக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆப்பிள் நிறுவனத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!

ABOUT THE AUTHOR

...view details