இதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஸ்பா கமல் தாஹல், நேபாள துணைப் பிரதமர் இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு, கரோனா பெருந்தொற்று, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் பேசிய புஸ்பா கமல் தாஹல், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய நிதியுதவியை நேபாளம் ஏற்றுக்கொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
'Millennium Challenge Corporation' கீழ் நேபாளத்துக்கு அமெரிக்கா வழங்க முன்வந்துள்ள நிதியுதவியை ஏற்க வேண்டுமா, வேண்டாமா? என நேபாள ஆளுங்கட்சியினர் இடையே விவாதம் நடந்துவரும் சூழலில், கமல் தாஹல் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் எல்லைப் பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அவசியம் என்ன என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த நேபாள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், ராஷ்டிரிய பிஜதான்திரா கட்சித் தலைவருமான கமல் தப்பா, "இந்தக் கூட்டம் கண்டனத்திற்குரியது. இது நவீன காலனி ஆதிக்க பயிற்சி" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதற்கிடையே, "Belt and Road International Cooperation: Combating COVID-19 with Solidarity" என்ற தலைப்பில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையில் காணொலிவாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி பங்கேற்றார்.
இதையும் படிங்க : 'இனவெறியர் எனக் கூறியதற்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்'