தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தலாய் லாமா உடல்நிலை குறித்த செய்தி... அரசே விசாரணையை கைவிடு! - probe

காத்மாண்டு: தலாய் லாமாவின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிட்டதற்காக, மூன்று செய்தியாளர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை கைவிட வேண்டும் என ஆர்.எஸ்.எஃப். என்னும் சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தலாய் லாமா

By

Published : May 19, 2019, 2:59 PM IST

திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா, நாடு கடந்து இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து நேபாளம் நாட்டின் செய்தி நிறுவனமான ராஷ்ட்ரிய சமாசார் சமிதி செய்தி ஒன்றை வெளியிட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளரை விசாரணை நடத்த நேபாளத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவர்கள் மீதான விசாரணையை கைவிட வேண்டும் என பாரிஸை தலைமையகமாக கொண்டு செயல்படும் ரிப்போர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்(ஆர்.எஸ்.எஃப்.) அமைப்பு நேபாளம் அரசை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்களின் செயலுக்கும் கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details