தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Rockets fired
Rockets fired

By

Published : Dec 19, 2020, 3:19 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பை வீழ்த்த அமெரிக்க படையினர் 2002ஆம் ஆண்டு படையெடுத்து சென்றனர். அமெரிக்க ராணுவத்தினருடன் நேட்டோ அமைப்பும் படையினரும் இணைந்து, அங்கு விமானப்படை ஏவுதளங்களை நிறுவியுள்ளனர்.

ஆப்கானின் பக்ராம் விமானப்படை ஏவுதளத்தில் அமெரிக்க விமானப்படையினரை குறிவைத்து நேற்று வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் எட்டு ராக்கெட்டுகள் விமானத் தளத்தை தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தலிபான் அமைப்புதான் இதில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி ஆப்கான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:அஜித் தோவால் மகனிடம் மன்னிப்புக்கோரிய காங். மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

ABOUT THE AUTHOR

...view details