பல நாடுகளை உலுக்கிய கரோனா வைரஸால், தாய்லாந்தில் தனது ஆட்டத்தை காட்ட முடியவில்லை. இதுவரை அங்கு 3 ஆயிரத்து 54 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 ஆயிரத்து 931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்கம் குறைந்ததால் தாய்லாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பொது இடங்களும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டன.
அதன்படி, பாங்காக்கில் திறக்கப்பட்ட ஷாப்பிங் மால் ஒன்றில், கரோனா அச்சத்தால் மக்கள் வருவதை தவிர்க்கக்கூடாது என்பதற்காக நான்கு விதமான ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
அதாவது PP என்ற ரோபோட், சுகாதார அறிவுறைகளும், விழிப்புணர்வு வாசகங்களுடன் மால் பகுதியை சுற்றும். LISA என்ற ரோபோட்டில் உள்ள 'லைவ் இன்டெலிஜென்ட் சர்வீஸ் அசிஸ்டென்ட்' வசதி மூலம் மக்கள் ஹேண்ட் ஜெல் டிஸ்பென்சர்களை கண்டறிய உதவியாக இருக்கும். K9 ரோபோட் பின்புறத்தில் சானிடைசர் பாட்டில் வைத்துக்கொண்டு மாலில் வலம் வரும்.
இத்தகைய ரோபோட் வசதிகளால் மக்கள் சிரமமின்றி ஷாப்பிங் மாலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த ரோபோட்களை மாலில் உள்ள தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்
இதையும் படிங்க:இந்தியாவின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- பாகிஸ்தான்