கடந்த மே மாதம், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, எல்லையை பலப்படுத்தும் முயற்சியில் நேபாளம் களமிறங்கியது. சீனாவுடன் நட்புறவாகப் பழகி வரும் நேபாளம், சீன எல்லையில் உள்ள கிராமங்களையும் தங்கள் நாட்டு மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் சாலை ஒன்றை அமைக்க ராணுவத்திடம் கோரியிருந்தது.
சீன எல்லையில் உள்ள கிராமங்களை இணைக்கும் புதிய சாலை - எல்லையை பலப்படுத்தும் நேபாளம்! - கிராமங்களை இணைக்கும் புதிய நேபாள் சாலை
காத்மாண்டு : சீன எல்லையில் உள்ள கிராமங்களான சாங்ரு மற்றும் டிங்கரை தங்கள் நாட்டு மாவட்டத்துடன் இணைக்கும் புதிய சாலையை நேபாள ராணுவம் அமைத்துள்ளது.
oad
அதன்படி இன்று (அக்.06), நேபாள ராணுவம் புதிதாக அமைத்த சாலையை மேற்கு மாகாண நேபாள முதலமைச்சர் திரிலோச்சன் பட் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது நிர்வாக அலுவலர்கள், ராணுவத்தைச் சேர்ந்த பல மூத்த அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.