தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மலேசியா- இந்திய பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்: அன்வர் இப்ராஹிம் - மலேஷியா- இந்தியா பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்: மலேசியா- இந்தியா இடையே ஏற்பட்டுள்ள பூசல் சுமுகமாகப் பேசி தீர்க்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் பார்த்தி கெடிலன் ராக்யாத் தலைவருமான அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

Resolve Malaysia-India tensions amicably: Anwar Ibrahim

By

Published : Oct 24, 2019, 9:27 PM IST

Updated : Oct 24, 2019, 10:04 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி (சட்டப்பிரிவு 370) நீக்கத்துக்கு எதிராக மலேசிய தலைவர்கள் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில் மலேசிய பிரதமர் மகதீர் முகமது, இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மன்றத்தில் பேச வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தை ஐ.நா.வில் பேச வேண்டும் என்ற மலேசிய பிரதமரின் கருத்துக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வர்த்தக உறவுகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் இரு நாடுகளும் சுமுகமாகப் பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என மலேசிய தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் இங்குள்ள (அதாவது மலேசியாவில் உள்ள) சில குழுக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசிய நாட்டிலிருந்து இந்தியா பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. கடந்த ஆண்டு (2018) 1.65 பில்லியன் டாலர் பாமாயில் மலேசியா இறக்குமதி செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: J&K issue காஷ்மீர் நிலைபாட்டில் உறுதியாக உள்ள மலேசிய பிரதமர்

Last Updated : Oct 24, 2019, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details