தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு - Record 35 presidential candidates file nomination in Sri Lanka

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவிலான போட்டியாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

sri lankan election

By

Published : Oct 8, 2019, 11:28 AM IST

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைப்புத்தொகை செலுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 41 வரை வைப்புத்தொகை செலுத்தினர்.

பின்னர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் இரண்டு மணி நேரம் ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. பின்னர் தேர்தல் ஆணையம் வெளிட்ட இறுதிப்பட்டியலில் முன்னாள் இலங்கை பொதுஜனா பேராமுனா கட்சி சார்பில் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்பய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த முறையே அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னதாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 22 பேர் போட்டியிட்டதே அதிகமாக இருந்தது. மேலும், இந்தத் தேர்தலில் இரண்டு புத்த தூதர்கள், நான்கு இஸ்லாமியர்கள், ஒரு தமிழர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப்போதில்லை என அறிவிக்கப்பட்டது. ஏனெனில் இவர் தனது முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததும், கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஏற்படுத்திய குழப்பமும் மக்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம் என்பதால் அவர் அதிலிருந்து விலகியுள்ளார்.

அதே போன்று இம்முறை தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோர் சமமான போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். கோத்பய ராஜபக்ச அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்சவின் அரசின் கீழ் ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர். அச்சமயத்தில்தான் அந்நாட்டில் நடைபெற்றுவந்த உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சஜித் பிரேமதாச, விடுதலைப்புலிகளால் 1993ஆம் ஆண்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details