இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா சென்றுள்ளார். அங்கு சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்திக்க உள்ளார்.
எல்லையில் பதற்றம்: சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்கும் ராஜ்நாத் சிங் - சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்
மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

கல்வான் மோதலைத் தொடர்ந்து, இரு நாட்டு அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசயிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, தொலைப்பேசி மூலம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் எல்லை விவகாரம் குறித்து ஆலோசித்தனர்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்ததன் பேரில், இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் தென்கரையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த சீனா, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.