தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் 2 மணி நேரம் ஆலோசனை!

மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

By

Published : Sep 5, 2020, 11:40 AM IST

Rajnath, Chinese counterpart hold talks
Rajnath, Chinese counterpart hold talks

ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் இந்திய பகுதியில் சீனா ஊடுருவ முயன்றது, அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிந்தது.

இந்தச்சூழலில் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றிந்ததால், இந்தப் பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இருப்பினும், ரஷ்யாவில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ராஜ்நாத் சிங் அலுவலகம் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலையை தணிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரு நாட்டு அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசயிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு முடிந்தது. இந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரம் 20 நிமிடம் வரை நீடித்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பாதுகாப்புத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதன்பேரிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் சீன பிரதிநிதிகள் முன்னிலையில் பேசிய ராஜ்நாத் சிங், "பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு என்பவை நம்பிக்கை, ஆக்கிரமிக்கும் மனநிலை இல்லாமல் இருப்பது, வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பது, சர்வதேச விதிகளுக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக்!

ABOUT THE AUTHOR

...view details