தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புதிய அமெரிக்க அதிபரை வாழ்த்தாமல் இருக்க இதுதான் காரணம்! - ரஷ்ய அதிபர்

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவுவதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாலேயே புதிய அதிபரை வாழ்த்தவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

Putin
Putin

By

Published : Nov 22, 2020, 8:24 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்று, அந்நாட்டின் 46ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு பல சர்வதேச தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுவரை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பாதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதுதான் முறையான அணுகுமுறை.

நாங்கள் ஒருவரை விரும்புகிறோம் அல்லது விரும்பவில்லை என்பது அல்ல. தேர்தல் முடிவுகள் குறித்து குழப்பம் நிலவுகிறது. அது முடிவுக்கு வர நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்தலில் மாபெரும் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார். மேலும், பல மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கையும் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details