தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு ரஷ்யா - புடின் பெருமிதம் - ஹைபர்சோனிக் ஆயுதம் ரஷ்யா

மாஸ்கோ : ஒலியைவிட வேகமாக பயணித்து இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஹைபர்சோனிக் ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு ரஷ்யா என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

russia president putin
russia president putin

By

Published : Dec 25, 2019, 7:23 PM IST

ரஷ்யா தலைகநர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு பாதுகாப்புப் படை உயர்மட்ட அலுவலர்களிடையே அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றினார்.

அப்போது, "ஹைபர்சோனிக் ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு ரஷ்யாதான். ஏற்கனவே கின்ஸ்ஹால் (Kinzhal) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்யப் படையில் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் அவாங்கார்ட் (Avangarad) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அவாங்கார்ட், ஒலியை விட 20 மடங்கு வேகமாக பயணிக்ககூடியது. இதுதவிர, எதிரிகளுடைய ஏவுகணைகளின் கண்ணில் மண்ணைத் தூவ அவாங்கார்ட்டின் பாதையையும், உயரத்தையும் மாற்றியமைக்க முடியும்.

இதன் மூலம், புதிய வகை ஆயுதங்களை உருவாக்குவதில் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விஞ்சியுள்ளது ரஷ்யா" என்றார்.

கடந்த ஆண்டு, ரஷ்ய படையில் பயன்பாட்டிற்கு வந்த கின்ஸ்ஹால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, ஒலியை விட 10 மடங்கு வேகாக பயணித்து 2000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த வகை ஏவுகணைகளை மிக்-31 போர் விமானங்கள் சுமந்து செல்கின்றன.

இதையும் படிங்க : 'நல்ல கிறிஸ்துமஸ் பரிசை வடகொரியா தரும் என நினைக்கிறேன் ' - கூல் டிரம்ப்

ABOUT THE AUTHOR

...view details