தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆட்சியை தக்க வைக்க உதவும் மசோதா : ரஷ்ய அதிபர் ஒப்புதல் - Russia president putin backs amendment

வாஷிங்டன் : ரஷ்ய தேர்தல் விதிமுறைகளை தளர்த்தும் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

putin
putin

By

Published : Mar 10, 2020, 9:33 PM IST

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அமோகமாக வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைந்தார்.

ரஷ்ய அரசியலைப்புச் சட்டத்தின்படி, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக பதவி வகிந்தவர்கள் (20 ஆண்டுகளாக ஆட்சியில் புடின் பிரதமராகவும் இருந்துள்ளார்) மீண்டும் தேர்தலைச் சந்திக்க முடியாது.

இந்நிலையில், இந்த விதிமுறையை தளர்த்தி புடின் மீண்டும் தேர்தலைச் சந்திக்க ஏதுவாக அந்நாட்டு அரசு அரசியலைப்பு திருத்த மசோதா ஒன்றை கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த மசோதா ரஷ்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் எளிதில் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கொரோனா - ஈரானில் உயிரிழப்பு 291ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details