கராச்சி - பாகிஸ்தான்:கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. கரோனாவை விரட்டியடிக்கத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பணி பல நாடுகளில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாததால், மக்களை ஈர்த்திட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய யுக்தியைக் கையாள உள்ளது.