தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க ஆதரவு பதாகைளுடன் சீனாவை சீண்டும் ஹாங்காங் போராட்டக்காரர்கள்

டெல்லி: அமெரிக்க அரசு, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளுடன் ஹாங்காங் போராட்டக்காரர்கள் வீதிகளில் அணிவகுப்பு மேற்கொண்டனர்.

HongKong
HongKong

By

Published : Dec 1, 2019, 3:52 PM IST

சீனாவின் தன்னாட்சி பிராந்தியங்களுள் ஒன்றான ஹாங்காங்கில் ஜனநாயக உரிமை கோரி, அரசுக்கு எதிராக ஹாங்காங் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் நிலைமை தீவிரமடைந்ததையடுத்து சீன அரசு தனது ராணுவத்தை ஹாங்காங் பிரதேசத்துக்கு அனுப்பி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர செயலில் ஈடுபட்டது.

இச்செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது என அமெரிக்க அரசும், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சீனாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஹாங்காங் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹாங்காங்கில் கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தல் முடிவில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றிபெற்றதையடுத்து போராட்டத்தின் தீவிரம் தற்போது குறைந்துள்ளது.

இதையடுத்து, சீனாவின் அடுக்குமுறைக்கு எதிராகவும் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பை மேற்கொண்டனர். இதில் அமெரிக்க கொடிகளையும், ட்ரம்ப் ஆதரவு பதாகைகளையும் ஏந்தி போராட்டக்கார்கள் கோஷம் எழுப்பினர்.

ட்ரமப்புக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளுடன் போராட்டக்காரர்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகம் தொடர்பாக பணிப்போர் நிலவிவரும் நிலையில், சீன அரசை சீண்டும் வகையில் மேற்கொண்ட அணிவகுப்பு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: 55ஆவது எல்லை பாதுகாப்பு தின அணிவகுப்பு; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details