கரோனா வைரஸை எதிர்த்து சார்க் நாடுகள் போராடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து சார்க் அமைப்பு நாடுகளுக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ''சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சகர் ஃசாபர் மிர்சா மற்றும் மூத்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் ஈசாலா ருவான் வீரகோன் கலந்துகொள்ளவுள்ளார்.
அப்போது, கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தீவிரமான ஒத்துழைப்பை வழங்குவது, நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவது, தேசிய திறன்களை உருவாக்குவது, சிறந்த மருத்துவ பயிற்சிகளை பகிர்வது, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளன.