தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'1001 நாள் சிறைவாசம்' சவுதியில் பெண்களுக்காக போராடியவர் விடுவிப்பு! - 7 ஆண்டுக்கால சிறைத் தண்டனை

சவுதி: பெண்கள் வாகனம் ஒட்டுவதற்கு விதித்திருந்த தடைக்கு எதிராகப் போராடிய பெண்ணை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரசு விடுவித்துள்ளது.

Saudi women
சவுதி அரேபியா

By

Published : Feb 11, 2021, 4:47 PM IST

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவர லூஜெய்ன் அல்-ஹத்லூல் என்ற பெண் குரல் கொடுத்தார். இவருக்கு ஆதரவு கிடைத்திருந்தாலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவருக்கு 7 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தற்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் தண்டனை காலத்தைக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்திருந்து குறிப்பிடத்தக்கது.

1001 நாள்கள் சிறைவாசம் முடிந்து லூஜெய்ன் வீடு திரும்பியுள்ளார். அவரின் வருகையால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இவரின் விடுதலை குறித்து சவுதி அலுவலர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க:பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ராஜினாமா செய்கிறாரா யோஷிரோ மோரி?

ABOUT THE AUTHOR

...view details