புதிதாக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் ஆரம்பதிலிருந்தே தொடர்ச்சியான பின் விளைவுகளை சந்தித்துவருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை படையெடுத்த அமெரிக்கா, அங்கிருந்த பயங்கரவாத அமைப்பான தலிபான் ஆட்சியை நீக்கி புதிதாக ஜனநாயக அரசை நிறுவியது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின், ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்விளைவாக அமெரிக்கா - தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் அன்மையில் நிறைவேற்றப்பட்டது.
ஒப்பந்தம் மேற்கொண்ட அடுத்த சில நாட்களிலேயே, ஆப்கானில் தலிபான்கள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து, அமெரிக்க ராணுவமும் பதில் தாக்குதல் நடத்திவருகிறது. இப்படி ஆரம்பம் முதலே ஒப்பந்தம் சிக்கலைச் சந்தித்துவரும் நிலையில், தற்போது அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.