தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கான் அதிபர் அலுவலகத்தில் 20 பேருக்கு கரோனா? - ஆப்கான் அதிபர் அலுவலகத்தில் 20 பேருக்கு கரோனா

ஆப்கான் அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கான் அதிபர்
ஆப்கான் அதிபர்

By

Published : Apr 20, 2020, 1:05 PM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 24,04,413 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,65,243 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை மூத்த அரசு அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் ஆப்கான் அதிபர் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை, அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்த தகவல்களும் வெளிவரவில்லை. எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் ஆப்கான் அதிபர் அலுவலகம் வெளியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் மூத்த அலுவலர்களை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். 70 வயதான கானி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் கரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆப்கானிஸ்தானில் இதுவரை 993 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், ஈரானிலிருந்து 2,00,000 ஆப்கானியர்கள் தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக சர்வதேச புலம்பெயர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. கரோனா வைரஸ் நோய் பாதிப்பு அதிகமுள்ள ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய அகதிகளால் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜப்பானில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம்!

ABOUT THE AUTHOR

...view details