இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாட்டிகனில் திறந்தவெளியில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது,
போப் ஃபிரான்சிஸ் கூறுகையில்,
- இந்தக் கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். குண்டு வெடிப்புச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன் என்றார்.
ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
- இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். இலங்கை அரசுக்கு இந்த நேரத்தில் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்
- எங்களை இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் தோற்கடித்துவிடாது என தெரிவித்தார்.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்
- ஈஸ்டர் திருநாளை கொண்டாடுவதற்காக கூடிய மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு இரையான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக வேதனை தெரிவித்தார்.